header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Wednesday, 17 January 2018

JIO க்கு போட்டியாக மாறும் ஐடியா வோடபோன் இணைப்பு

ஐடியா - வோடஃபோன் இணைந்து சேவை!!!



ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன.

இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் ஏர்டெலைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சேவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே இருந்து வந்த நிலையில், இவ்விரு நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் மாதம் முதல் சேவை வழங்கவுள்ளன

இவ்விரு நிறுவனங்கள் இணைந்து புதிதாக உருவாகும் நிறுவனமானது உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும், இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும் திகழும்.

4 கோடி வாடிக்கையாளர்களுடன், இந்தியாவின் நெட்வொர்க் வாடிக்கையாளர் சந்தையில் 35 சதவிகிதப் பங்கையும், வருவாய் அடிப்படையில் 41 சதவிகித சந்தைப் பங்கையும் இப்புதிய நிறுவனம் கொண்டிருக்கும்.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது .

2016 செப்டம்பர் மாதத்தில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு கடுமையான போட்டி நிலவி வருகிறது. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை ஜியோ வழங்கி வருவதால் அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஜியோவுக்குப் போட்டியாகப் பிற நிறுவனங்களும் கட்டணச் சலுகைகளை அறிவித்து வருவதால் அந்நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இச்சூழலைச் சமாளிக்கவே ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைய முடிவெடுத்தன என்பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment