header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்
Showing posts with label Jio. Show all posts
Showing posts with label Jio. Show all posts

Saturday, 31 March 2018

ஜியோ பிரைம் மேலும் ஒரு ஆண்டுக்கு இலவசம்



JIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை!!! ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்க ு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள ுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சேவை வழங்கப்பட உள்ளது. டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள ுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன. இந்நிலையில், பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 
ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், 
ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, 9 January 2018

ஜியொவின் அதிரடி திட்டங்கள் இன்று முதல் அமல்

ஜியோவின் பிரபல ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி திருத்தங்கள், இன்று முதல் அமல்.! முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது சமீபத்தில் மேலுல் சில அதிரடியான புத்தாண்டு சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. அந்த அறிவிப்பின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு ஜிபி டேட்டாவின் மதிப்பை ரூ.4/-க்கு கொண்டுவந்துள்ளது.
 In comparison Airtel and Vodafone have plans at Rs 199 and Rs 198 respectively with 1GB daily data and unlimited free calls. Here’s a quick at Reliance Jio’s new data plans. The company has also indicated it will likely make more changes to its plans, giving customers better than current deals.
 'ஹேப்பி நியூ இயர் 2018' திட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தங்களில் சில கட்டண திட்டங்களின் விலையை குறைப்பதாகவும் மற்றும் சில ரீசார்ஜ் திட்டங்களின் நன்மைகளை அதிகரிப்பதாகவும் கடந்த ஜனவரி 5-ஆம் தேதியன்று ஜியோ அறிவித்தது.
மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன இந்த அறிவிப்பின் கீழ் நாள் ஒன்றிக்கு 1ஜிபி வழங்கும் 4 திட்டங்களும் மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் 4 திட்டங்களுமென மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவைகள் அனைத்துமே இன்றுமுதல் ரீசார்ஜ் செய்ய திறந்து விடப்பட்டுள்ளன.

அவைகள் என்னென்ன திட்டங்கள்.?

அதன் முந்தைய மற்றும் தற்போதயை நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம். இனி ரூ.149/-க்கு கிடைக்கும் ரூ.199/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.149/-க்கு கிடைக்கும். மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி ரூ.349/-க்கு கிடைக்கும் ரூ.399/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல்

ரூ.349/-க்கு கிடைக்கும். மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி ரூ.399/-க்கு கிடைக்கும் ரூ.459/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.399/-க்கு கிடைக்கும். மொத்தம் 84ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி ரூ.449/-க்கு கிடைக்கும் ரூ.499/-க்கு கிடைத்த திட்டமானது இன்று முதல் ரூ.449/-க்கு கிடைக்கும். மொத்தம் 91ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டா நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 28 நாட்களுக்கு 28ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ.198/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டா நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 70 நாட்களுக்கு 70ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ.398/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டா நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 84 நாட்களுக்கு 84ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ448/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும். இனி 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டா நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 91 நாட்களுக்கு 91ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ498/- திட்டமானது இன்று முதல் அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்