header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Thursday, 18 January 2018

பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் நேரடியாக க

வகுப்பறை சிசிடிவி காட்சிகளை பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி


வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தெரிவித்தார்.

இது குறித்து அவர் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினேன்.

 வகுப்பறைகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை பெற்றோர்கள் பார்ப்பதற்கு விரைவில் வசதி செய்யப்படும். இதன் மூலம் கல்வித் துறையில் வெளிப்டைத் தன்மை உருவாகும். குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment