header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Tuesday, 14 August 2018

மக்கும் தன்மை கொண்ட தேசிய கொடி தயாரிப்பு




*நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் தயாரித்த தேசியக்கொடியை தவிர்க்கும் பொருட்டு மண்ணூர் மலை, அரசுப்பள்ளி மாணவர்கள் மக்கும் பொருட்களைக்கொண்டு தேசியக்கொடி தயாரித்தனர்.*
 *சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் மக்காத பொருளான செய்தித்தாளை குச்சியாக செய்து அதில் காகிதத்திலான தேசியக்கொடியை ஒட்டி முழுவதும் மக்கும் வகையிலான தேசியக்கொடியை செய்து காண்பித்தார்.
உடன் மாணவர்களும் தங்களுக்கு சுதந்திர தினத்திற்கு தேவையான மக்கும் வகையான தேசியக்கொடியை தயாரித்தனர்*



No comments:

Post a Comment