*அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு*
*சேலம் ,மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நோபல் பரிசு பெற்றவரும் பாரத நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் வெங்கடாசலம், பால்குமார் மற்றும் மாணவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
JRC ஆசிரியர் ஜோசப் ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடவேண்டும், 13வரிகளை கொண்ட தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடிவிட வேண்டும் ,பாடும் போது நேராக அசையாமல் நின்று பாடவேண்டும், மேலும் அவர் வங்க தேசம் நாட்டிற்கும் தேசிய கீதம் எழுதியுள்ளார்,அவர் எழுதிய கீதாஞ்சலி நூலுக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசினை 1913 ம் ஆண்டு வழங்கப்பட்ட து போன்ற தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்*
No comments:
Post a Comment