கல்விதாவரவியல் --- கல்விதாவரவியல் தளத்தில் தங்களின் பதிவுகள் இடம்பெற kalviselvamdng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுகளை அனுப்புங்கள் DO YOU WISH TO PUBLISH YOUR STUDY MATERIALS, QUESTION ANSWERS,ETC. SEND IT TO kalviselvamdng@gmail.com
Tuesday, 14 August 2018
அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு
*அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு*
*சேலம் ,மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நோபல் பரிசு பெற்றவரும் பாரத நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் வெங்கடாசலம், பால்குமார் மற்றும் மாணவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
JRC ஆசிரியர் ஜோசப் ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடவேண்டும், 13வரிகளை கொண்ட தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடிவிட வேண்டும் ,பாடும் போது நேராக அசையாமல் நின்று பாடவேண்டும், மேலும் அவர் வங்க தேசம் நாட்டிற்கும் தேசிய கீதம் எழுதியுள்ளார்,அவர் எழுதிய கீதாஞ்சலி நூலுக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசினை 1913 ம் ஆண்டு வழங்கப்பட்ட து போன்ற தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்*
மக்கும் தன்மை கொண்ட தேசிய கொடி தயாரிப்பு
*நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் தயாரித்த தேசியக்கொடியை தவிர்க்கும் பொருட்டு மண்ணூர் மலை, அரசுப்பள்ளி மாணவர்கள் மக்கும் பொருட்களைக்கொண்டு தேசியக்கொடி தயாரித்தனர்.*
*சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் மக்காத பொருளான செய்தித்தாளை குச்சியாக செய்து அதில் காகிதத்திலான தேசியக்கொடியை ஒட்டி முழுவதும் மக்கும் வகையிலான தேசியக்கொடியை செய்து காண்பித்தார்.
உடன் மாணவர்களும் தங்களுக்கு சுதந்திர தினத்திற்கு தேவையான மக்கும் வகையான தேசியக்கொடியை தயாரித்தனர்*
Subscribe to:
Posts (Atom)