header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Wednesday, 11 April 2018

ஏத்தாப்பூர் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா

*ஏத்தாப்பூர், அரசு பள்ளியில் ஆண்டு விழா*




*சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 125 ஆண்டு கால பழைமையான ஏத்தாப்பூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர் களாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுப்புலட்சுமி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், குப்புசாமி கலந்து கொண்டனர் மேலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழாவிற்கு ரூபாய் இருபதாயிரம் நன்கொடை வழங்கினார்கள்.
 பள்ளியின் ஆண்டு அறிக்கையை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் வாசித்தார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம், பாடல்,பேச்சுப்போட்டி,நடனம் ஆடுதல்,பாடல் பாடுதல், மற்றும் அபாக்கஸ் கணிதத்திறன்,மாணவர்களின் தனித்திறன் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியாக ஆங்கில பட்டதாரி ஆசிரியை கார்த்திகேயினி நன்றி கூறினார்*

No comments:

Post a Comment