header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Monday, 29 October 2018

நவம்பர் ஐந்தாம் 5ம் தேதி ஈடுசெய்யும் விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 ஆம் தேதியை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை தமிழக அரசு உத்தரவு



Sunday, 28 October 2018

சுய சான்று ஒப்பம் போதுமானது என்பதற்கான அரசாணை

 வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் மட்டுமே போதும் குரூப் A அல்லது குரூப் B  அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற தேவையில்லை தேவைப்படும்போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதுமானது.
 
சுய சான்றொப்பம் போதுமானது என்பதற்கான அரசாணை நகல்



பெரியார் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர M.Phil !

   பகுதி நேர ஆய்வு படிப்புகளுக்கு கட்டுப்பாடு: தாமத அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேர, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் 

 சேலம், பெரியார் பல்கலை, உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில், பகுதிநேர பிஹெச்.டி., எம்.பில்., ஆய்வு படிப்புகள் உள்ளன இவற்றில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கின்றனர்.

 நடப்பு கல்வியாண்டில், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது இந்நிலையில், பெரியார் பல்கலை கட்டுப்பாட்டில் வரும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே, இதில் சேர முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது இதனால், வேறு மாவட்டங்களிலிருந்து, ஆய்வு படிப்புக்கு விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர் இதுகுறித்து, சில ஆசிரியர்கள் கூறியதாவது வேறு மாவட்டங்களிலிருந்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடத்திவிட்டு, ஒருநாள் கூட வகுப்புக்கு வராமல், 

பகுதிநேர ஆய்வுப்படிப்பை முடிக்கும் நிலை உள்ளது தற்போது, நான்கு மாவட்டங்களுக்குள் பணி புரிபவர்கள் மட்டுமே, பகுதி நேர ஆய்வு படிப்பில் சேர முடியும் என அறிவித்துள்ளது, பல முறைகேடுகளை தடுக்கும். வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் முன்பே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும் விண்ணப்பத்தை ஏற்று, நுழைவுத்தேர்வு நடத்தி, நேர்காணலுக்கு பின், தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்போது அறிவிப்பதால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்


 SOURCE DINAMALAR WEBSITE 

தமிழில் எளிமையாக டைப் செய்ய வேண்டுமா ?

உங்கள் விரல்கள் டைப் செய்யாமலேயே பேசுவதை தானாக டைப் செய்யும் மொபைல் ஆப்...



*வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்*
 *வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்*
 *கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்*
 *தமிழ் எழுத தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்*
 *தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை* 
*ஆச்சரியம், அருமை*
 *எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்*
 *நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது*
 *வழி* *play Store செல்லவும்* *Gboard app என டைப் செய்து download செய்யவும்*
*உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்*
*வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்*
 *தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்*
 *கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது*


 *அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்* *ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்*
 *speak now என வரும்*
*நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்*
 *இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்*
 *தூய தமிழில் பேச வேண்டும்*
 *செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்* *முயற்சி செய்து பாருங்கள்*

 *குறிப்பு* *ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்* *Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்*


நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சந்தேகம் இருப்பின் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்

Saturday, 20 October 2018

மாசு கட்டுப்பாடு சான்று அவசியம்

மாசுகட்டுப்பாட்டு சான்று இல்லாதவர்கள் இழப்பீடு பெற முடியாது


தலைமை ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வேண்டும்

தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் வாரத்திற்கு 10 பாடவேளைகள் வகுப்பு எடுக்க வேண்டும் - இணை இயக்குநர் விளக்கம்.


Wednesday, 17 October 2018

கல்வித்தகவல்கள்


வாடிக்கையாளர் செல்போன் எண்ணை மாற்றி வங்கியில் நூதன திருட்டு

உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 60% மாக உயரும்

நேர்மையாக வரி செலுத்தினால் சலுகைகள் கிடைக்கும்

தொழில்நுட்ப படிப்புகளுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை