கல்வித்தாவரவியல் வாசகர்களுக்கு வணக்கம்
சமீப காலமாக ஆன்லைன் பேங்கிங் என்று சொல்லக்கூடிய இணையம் மூலம் வங்கிக்கணக்குகளை பராமரித்தல் வங்கிக்கு செல்லாமலேயே பணப்பரிமாற்றம் என வங்கி சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில் அதில் சிக்கல்கள் இல்லாமலும் இல்லை....
பெயர் தெரியாத ஒரு நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஏடிஎம் காலாவதி ஆகவுள்ளது அதனால் உங்கள் ஏடிஎம் இல் உள்ள 16இலக்க எண்ணை சொல்லுங்கள் என பேசும் நபர் கடைசியில் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை லாவகமாக கொள்ளையடித்து விடுவார்...
அதேபோன்று ஆர்பிஐ இல் இருந்து பேசுகிறோம் என வரும் அழைப்புகள் சில தங்களுக்கு பெரிய அளவிலான பரிசு தொகை கிடைக்கவுள்ளது அதனை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என கூறும் நபர்களால் ஏமாற்றப்படுகிறோம்....
மேலும் ஆன்லைன் பாங்கிங்கில் கொள்ளையடிக்கப்பட்ட நம்முடைய USER ID மற்றும் PASSWORD களை இணையத்திலிருந்து திருடும் கும்பல் அதன் மூலம் ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்கின்றன...
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பத்தால் நன்மைகள் இருப்பது போல தீமைகளும் இருக்கவே செய்கின்றன...
அதனால் Reserve Bank of India என்று சொல்லப்படும் ஆரபிஐ நேரடியாக களத்தில் இறங்கி வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.....